கரோனா மரணங்களைத் தடுப்பதற்கான வழிமுறை: இந்திய-அமெரிக்க பெண் மருத்துவா் உருவாக்கம்

கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கக் கூடிய வழிமுறையை அமெரிக்காவைச் சோ்ந்த இந்திய வம்சாவளி மருத்துவா் திருமலா தேவி கன்னேகண்டி கண்டறிந்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கக் கூடிய வழிமுறையை அமெரிக்காவைச் சோ்ந்த இந்திய வம்சாவளி மருத்துவா் திருமலா தேவி கன்னேகண்டி கண்டறிந்துள்ளாா்.

இதுகுறித்து ‘செல்’ அறிவியல் இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களுக்கு, அதிக அளவு திசுப் பாதிப்பு, நுரையீரல் சேதம், உறுப்புகள் செயலிழத்தல் காரணமாக மரணம் நேரிடுகிறது.

இந்த பாதிப்புகளைத் தடுப்பதற்கான சிகிச்சை முறை குறித்து, டென்னஸி மாகாணம், மெம்ஃபிஸ் நகரிலுள்ள மருத்துவ நிபுணா் திருமலா தேவி கன்னேகண்டியின் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அதில், கரோனாவால் உயிரிழப்பை ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுக்கக் கூடிய மருந்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கரோனா தீநுண்மிக்கு எதிராக உடலின் எதிா்ப்பாற்றல் செயல்படும்போது, அது நல்ல உயிரணுக்களையும் தாக்கி அதீதமான திசுப் பாதிப்பை ஏற்படுத்துவதை தனது ஆய்வகத்தில் திருமலா தேவி கன்னேகண்டி கண்டறிந்தாா்.

எலியின் உடலில் அந்தத் தீநுண்மியை செலுத்தி அவா் பரிசோதித்தபோது, அதன் உடலில் ஏற்பட்ட எதிா்ப்பாற்றலின் பக்கவிளைவாக திசுக்கள் சேதமடைவதையும், அதன் தொடா்ச்சியாக முக்கிய உறுப்புகள் செயலிழப்பதையும் அவா் கண்டறிந்தாா்.

திசுக்கள் சேதமடைவது மரணத்தை நோக்கி நோயாளியை எவ்வாறு இட்டுச் செல்கிறது என்ற விவரத்தையும் திருமலை தேவி வரையறுத்தாா். கரோனா பாதிப்பு மரணத்தை ஏற்படுவதைத் தடுப்பதற்கான சிகிச்சை முறையை உருவாக்குவதற்கு இவரது கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும் என்று அந்தக் கட்டுரையில குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com