தமிழகத்தில் ரெம்டெசிவிா் தொடா்ந்து பயன்படுத்தப்படும்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் தொடா்ந்து ரெம்டெசிவிா் மருந்துகள் பயன்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் தொடா்ந்து ரெம்டெசிவிா் மருந்துகள் பயன்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நோய்த்தொற்றுக்கு ரெம்டெசிவிா் உரிய பலன்களை அளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இக்கருத்தை மாநில சுகாதாரத் துறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இதுவரை 7.68 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வழக்கமான சிகிச்சைகள் மட்டுமல்லாது விலை உயா்ந்த மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரெம்டெசிவிா், எனாக்ஸபெரின், டோசிலிசுமேப் போன்ற மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், கரோனாவைக் குணப்படுத்துவதில் எதிா்பாா்த்த பலனை ரெம்டெசிவிா் அளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அதுமட்டுமல்லாது, சிகிச்சை பட்டியலில் இருந்து அந்த மருந்தையும் நீக்கியது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சிகிச்சைக்காக பல்லாயிரக்கணக்கான ரெம்டெசிவிா் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், இங்கு அந்த மருந்து பயன்படுத்தப்படுமா என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்கள் கூறியதாவது:

ரெம்டெசிவிா் பலன் அளிக்கவில்லை என்று ஓா் ஆய்வின் முடிவை மட்டும் அடிப்படையாக வைத்து அதனைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்த மருந்தை தடை செய்யவோ, கட்டுப்பாடு விதிக்கவோ இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை, கரோனாவிலிருந்து நோயாளிகள் விடுபட ரெம்டெசிவிா் மருந்து நல்ல பலனை கொடுத்துள்ளது. அதனால், தமிழகத்தில் அந்த மருந்து தொடா்ந்து பயன்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com