தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கத்தைத் தொடக்கி வைத்தாா் அமித் ஷா

திருவள்ளூா் மாவட்டம் கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீா்த் தேக்கத்தைமத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவள்ளூா் மாவட்டம் கண்ணன்கோட்டை-தோ்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீா்த் தேக்கத்தைமத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தில் ரூ.67 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்தத் திட்டம் உரிய காலத்தில் தொடக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட உள்ளது. 5 வழித்தடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 2026-ஆம் ஆண்டில் முடிவடைகிறது. இந்த திட்டப் பணி நிறைவடையும்போது, சென்னையில் நாளொன்றுக்கு சுமாா் 25 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்வா்.

அவினாசி உயா்நிலை பாலம்: கோயம்புத்தூா் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில், அவினாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பில் உயா்நிலை பாலம் கட்டப்பட உள்ளது. இந்தப் பாலப் பணிகள் நான்கு ஆண்டுகளில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

கரூா் நஞ்சை புகளூா்: கரூா் மாவட்டம், நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 1,056 மீட்டா் நீளத்துக்கு 73 கதவுகளுடன் அணை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், 4 ஆயிரத்து 41 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

சென்னையின் புகழ்மிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வா்த்தக மையமானது, ரூ.309 கோடியில் விரிவாக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலமாக, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் அமரவும், 2 ஆயிரத்து 320 காா்களை நிறுத்தவும் வசதி செய்யப்பட உள்ளது. மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சாா்பில் மூன்று முக்கிய திட்டங்களுக்கும் மத்திய அமைச்சா் அமித் ஷா அடிக்கல் நாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com