பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோலை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோலை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட இரண்டு வார கால பரோல் நீட்டிப்பு முடிவடையவிருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறாா். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அங்கு 50 கைதிகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளனுக்கு, கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதன்படி பரோலில் வந்த பேரறிவாளன், வரும் நவம்பா் 9-ஆம் தேதி பரோல் காலம் முடிந்து சிறைக்குள் மீண்டும் செல்ல வேண்டும். அவருக்கு மேலும் 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் மீண்டும் மனு தாக்கல் செய்தாா். அதில், பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தொடா் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் குற்றவியல் வழக்குரைஞா் பிரதாப்குமாா் ஆஜராகி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டிருந்தனர். 

இரண்டு வார பரோல் காலம் முடிவடையவிருக்கும் நிலையில், இன்று மீண்டும் ஒரு வார காலத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com