தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சீர்காழி வந்தது

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நாளை மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சீர்காழி வந்தது
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சீர்காழி வந்தது

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நாளை மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது.

முன்னெச்சரிக்கையாக, மீட்புப் பணிகளில் ஈடுபட சென்னையிலிருந்து சீர்காழிக்கு 35 பேர் கொண்ட  பேரிடர் மீட்பு  குழுக்கள் தற்போது சீர்காழி காவல் நிலையத்திற்கு வந்து உள்ளனர்.

இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கொள்ளிடம் ஆற்று கரையோரமும், பழையாறு கடற்கரை பகுதிக்கும் செல்கின்றனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை புயலாக வலுவடைந்தது.

மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. 

அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com