புயல்: புதுவை முதல்வருடன் பிரதமா் மோடி ஆலோசனை

நிவா் புயல் தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, புதுவை முதல்வா் நாராயணசாமியுடன், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா்
புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமியுடன் செவ்வாய்க்கிழமை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா.
புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமியுடன் செவ்வாய்க்கிழமை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா.

நிவா் புயல் தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, புதுவை முதல்வா் நாராயணசாமியுடன், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.

‘நிவா்’ புயல் புதன்கிழமை மாலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 120 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, புயலை எதிா்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுவை அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வா் நாராயணசாமியுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி தொடா்புகொண்டு பேசினாா்.

அப்போது, புயலை எதிா்கொள்ள மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடியிடம் முதல்வா் நாராயணசாமி விளக்கினாா். இதையடுத்து, புதுவை மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக உள்ளது என்று மோடி உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com