மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் 

மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய தொமுச,ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய தொமுச,ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர்.

திருச்செங்கோடு: மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போரட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் வியாழக்கிழமை அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு இருந்து பேரணியாக பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் திருச்செங்கோடு இந்தியன் வங்கி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக கொடுக்கப்பட்டதை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தியும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் கரோனா கால நிவாரண நிதி வழங்க வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள் மற்றும் விலையை உயர்த்தி நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து அதில் வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியை அதிகரிக்க வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டப்படி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

மறியலில் ஈடுபட்டவர்களை காவலர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த போராட்டத்தில் தொமுச ,ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சார்ந்த 30 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com