புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

நிவர் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடலூர் செல்கிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: நிவர் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடலூர் செல்கிறார். 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதன்கிழமை இரவு 10.58 மணிக்கு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கத் தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது. 

புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்தது. பல இடங்களில் தகவல் தொடர்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் தென்னை  உள்ளிட்ட மரங்கள் சூறாவளி காற்றால் அடியோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன.

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை, வானூர், மயிலம், செஞ்சி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

இந்நிலையில், நிவர் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார். 

வியாழக்கிழமை காலை முடிச்சூர், வேளச்சேரி பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை பாரதி நகர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com