புயலுக்கு பிறகு விழுப்புரத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

புயலுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

புயலுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

நிவர் புயல் புதன்கிழமை நள்ளிரவு விழுப்புரம் மாவட்டத்தை தாக்கியது. புயலின்போது பலத்த மழையுடன் சூறைக்காற்று வீசியது. இதனால், ஏராளமான மரங்கள் சாய்ந்தன. வீட்டுகள் சேதமடைந்தன. மேலும், புயலால் குப்பைகள், மரக்கிளைகள் அங்கங்கே குவிந்தன

புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வீடுகள், சாலைகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதில் பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், தீயணைப்பு ‌துறையினர் ஈடுப்பட்டு வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புயலிலும் மழையிலும் அடித்து வரப்பட்டு குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் மரத்தின் இலைகள் போன்றவைகளை அப்புறப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இதில் விழுப்புரம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருநெல்வேலி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com