கரையை கடந்த நிவர் புயல்: ரயில் பாதைகளில் சேதம் குறித்து ஆய்வு

புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயலால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
'டிராலி' மூலமாக ரயில் பாதையில் ஆய்வு செய்யும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்.
'டிராலி' மூலமாக ரயில் பாதையில் ஆய்வு செய்யும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்.

புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயலால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே புதன்கிழமை நள்ளிரவு நிவர் புயல் கரையை கடந்தது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசியது.

புயல் மற்றும் கனமழையால் பல‌ இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

புயல் கரையை கடப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயலால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், குடியிருப்புகள், கட்டடங்கள் எவ்வளவு சேதமடைந்தது உள்ளன. மரங்கள் எவ்வளவு விழுந்துள்ளன, வேளாண் பயிர்கள் பாதிப்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ரயில்வே அதிகாரிகள் ரயில்பாதை எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது ‌என்று ஆய்வு செய்ய தொடங்கினார். குறிப்பாக விருத்தாச்சலம்- விழுப்புரம் இடையேயுள்ள 60 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதையில் புயல் காரணமாக ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளாதா? தண்டவாளங்கள் வலுவாக உள்ளதா? மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார் வருகின்றனர்.

இதற்காக 'டிராலி' மூலமாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர் ரயில் பாதையில் ஆய்வுக்காக சென்றனர்.

விருத்தாசலத்தில் இருந்து மேபுலியூர், பூவனூர், உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய்நல்லூர், கண்டம்பாக்கம் வழியாக விழுப்புரம் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com