தேனியில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல்

தேனி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வியாழக்கிழமை 15 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட் 1,476 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தேனியில் சாலை மறியல்
தேனியில் சாலை மறியல்

தேனி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வியாழக்கிழமை 15 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட் 1,476 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாவட்டத்தில் மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பொது வேலை நிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேருசிலை, நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இதில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் பெருமாள் மற்றும் சி.ஐ.டியு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., உள்ளிட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 226 பேரை தேனி காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர்.

போடியில்  5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 377 பேர், உத்தம பாளையம், ஆண்டிபட்டி வட்டாரங்களில் தலா 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 683 பேர், பெரியகுளத்தில் மறியலில் ஈடுபட்ட 190 பேர் உள்பட மொத்தம் 1,476 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com