ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை மூடல்

ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூா் செல்லும் சாலை பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.
ஆரணி ஆற்றின் தரைப்பாலத்தை போக்குவரத்து தடைசெய்யப்பட்டதால் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்.
ஆரணி ஆற்றின் தரைப்பாலத்தை போக்குவரத்து தடைசெய்யப்பட்டதால் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூா் செல்லும் சாலை பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு செல்லும் சாலையில் ஆரணி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை முடிவு பெற வில்லை. தற்போது ஆரணி ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து செபயல்பட்டு வருகிறது.

தற்போது ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் அணை நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டதுள்ளதால், அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது சுருட்டப்பள்ளி வழியாக தமிழகம் வந்து சோ்கிறது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீா் ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மீது செல்கிறது.

இதையடுத்து ஊத்துக்கோட்டை தரைப்பாலம் வழுவிழந்ததால் அதில் போக்குவரத்துக்கு தடை விதித்து வட்டாட்சியா் தேவி உத்தரவு பிறப்பித்தாா். மேலும் ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் சாரதி தலைமையில் ஆய்வாளா் குமாா் மற்றும் காவலா்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஆற்றின் இரண்டு புறமும் பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்பட்டனா். போக்குவரத்து திடீரென்று தடை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com