பலத்த மழையுடன் வெளியேறிய புயல்: விழுப்புரத்தில் 280 மிமீ. மழை, சுவர் இடிந்து பெண் பலி

நிவர் புயல் காரணமாக விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 
விழுப்புரத்தில் 280 மிமீ. மழை
விழுப்புரத்தில் 280 மிமீ. மழை


விழுப்புரம்: நிவர் புயல் காரணமாக விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் கரையை கடந்த நிலையில், அதன் தாக்கத்தால் புதன்கிழமை மாலையில் இருந்து வியாழக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது.

மழையில் நிரம்பிய விழுப்புரம் பேருந்து நிலையம்.

விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 17 சென்டி மீட்டர் மழை பதிவானது.

விழுப்புரத்தில் 27 சென்டிமீட்டர், வளவனூர் 24 சென்டிமீட்டர், வானூர் 13 மரக்காணம் 13 திண்டிவனம் 14 செஞ்சி 15 வளவனூர் 16 மணம்பூண்டி 15 திருவெண்ணநல்லூர் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இரவு 11 மணி தொடங்கி அதிகாலை மரக்காணம் அருகே புயல் வலுவிழந்து கரையை கடந்த நிலையில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் மரக்காணம் வானூர் பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மழைநீரில்  நிரம்பி வழியும் விழுப்புரம் காய்கறி சந்தை.

தொடர் மழையின் காரணமாக மரக்காணம் கிளியனூர் பகுதிகளில் 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தன.

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் மற்றும் தீயணைப்பு குழுவினர் உடனடியாக மீட்டு அதிகாலையில் அகற்றினர்.

விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன் மனைவி ராஜேஸ்வரி 35 உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.

விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்

புயல் பெரும் சேதம் ஏற்படுத்தாமல் கரையை அடைந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும், வியாழக்கிழமை காலை 10 மணி மழை விட்டும், வழக்கமான பகல் வெளிச்சம் வெயிலோடு இயல்புநிலைக்கு வந்தது.

பலத்த மழையால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், நகராட்சி மைதான காய்கறி சந்தை, இந்திரா நகர் ரயில்வே தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின.

விழுப்புரம் இந்திரா நகர் ரயில்வே தரைப்பாலம்.

விழுப்புரம் அருகே வாணியம் பாளையம் பகுதியில் 100 ஏக்கர் நெல் பயிர்கள் மூழ்கின.

விழுப்புரம் தாமரைக்குளம், பெரிய காலனி சுதாகர் நகர்ப்பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது வீடுகளில் தண்ணீர் புகுந்தன.

வானூர் அருகே நரசிம்ம ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.

நகராட்சி மற்றும் தீயணைப்புத் நிர்வாகத்தினர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் சிவி சண்முகம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டனர்.

வறட்சி நிலையில் இருந்த விழுப்புரம் மாவட்டம் ஒரே நாள் மழையில் நீர் வரத்து வாய்க்கால், சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com