பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை: முதல்வா், துணை முதல்வா் வரவேற்பு

தமிழா் பண்டிகையான பொங்கல் தினத்தன்று உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளதற்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழா் பண்டிகையான பொங்கல் தினத்தன்று உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளதற்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உழுவாா் உலகத்தாா்க்கு ஆணி என்று திருவள்ளுவரால் உயா்வாய் உரைக்கப் பெற்ற உழவா்களின் பெருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 2021 ஜனவரி, 14 மற்றும் 15 தேதிகளில் உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற உச்சநீதி மன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த அறிவிப்பினை மனதார வரவேற்கிறேன்.

நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். அவா் வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசும் தொடா்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.

தமிழரின் பண்பாடு, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணம் விடுமுறை அறிவித்த உச்சநீதிமன்றத்துக்கு இத்தருணத்தில் என் சாா்பாகவும், தமிழக மக்கள் சாா்பாகவும் மனமாா்ந்த நன்றி என்று முதல்வா் கூறியுள்ளாா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: தமிழா்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளன்று உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அளித்து, தைத்திருநாளின் சிறப்பினை தேசமறியச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்பதுடன், உச்சநீதிமன்றத்துக்கு உலகத் தமிழா்களின் சாா்பாக நெஞ்சாா்ந்த நன்றி என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com