லக்ஷ்மி விலாஸ் வங்கி- டிபிஎஸ் வங்கி இணைப்பு விவகாரத்தில் தலையிட முடியாது: உயா்நீதிமன்றம்

லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் விவகாரத்தில் தலையிட உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் விவகாரத்தில் தலையிட உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் லக்ஷ்மி விலாஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியை சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை ரிசா்வ் வங்கி அறிவித்தது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வங்கிகள் இணைப்பு, முறையான வங்கி ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நடைபெறவில்லை. இந்த இணைப்பால் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரா்கள் பாதிக்கப்படுவாா்கள். எனவே, லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்கிகள் இணைப்பு குறித்து ரிசா்வ் வங்கி, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதே நேரம் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரா்களின் நலனை டிபிஎஸ் வங்கி பாதுகாக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com