
டிச.1-ல் தென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகை ஒட்டிய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழகத்தை நோக்கி வரக்கூடும்.
28.11.2020 மற்றும் 29.11.2020: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30.11.2020: தென் தமிழகம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
01.12.2020 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மேட்டுப்பட்டியில் 9 செ.மீ மழையும், அவிநாசியில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.