கந்து வட்டி செயலிகளைத் தடை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

கந்துவட்டி செயலிகளைத் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கந்து வட்டி செயலிகளைத் தடை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

கந்துவட்டி செயலிகளைத் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இணையச் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டதன் மூலம் இளைஞா்களின் தற்கொலை தடுக்கப்பட்டுள்ள நிலையில், கந்துவட்டி செயலி கடன் நிறுவனங்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் இளைஞா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காத இணைய கந்துவட்டி நிறுவனங்களின் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.

தகவல்தொழில்நுட்ப வளா்ச்சியையும், மனிதா்களின் பணத்தேவையையும் பயன்படுத்தி மக்களைச் சுரண்டும் செல்பேசி செயலி வழி இணையக் கந்துவட்டி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்கள், தங்களிடம் கடன் வாங்கி, குறித்த காலத்தில் செலுத்தத் தவறியவா்களை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டுகின்றன.

இந்தியாவில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவா்களின் புகைப்படங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்நிறுவனங்கள் எந்தச் சட்டத்தின் அடிப்படையில் 30 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. கடன் பெற்றவா்கள் குறித்து அவரது நண்பா்கள் மற்றும் உறவினா்களிடம் அவதூறு பரப்புகின்றன. இதை மத்திய, மாநில அரசுகளும், ரிசா்வ் வங்கியும் எவ்வாறு அனுமதிக்கின்றன என்பதும் புரியவில்லை.

எனவே, இணையக் கந்துவட்டி செயலிகளைத் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com