பள்ளிகளில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்: யுஜிசி

பள்ளிகளிலேயே இணைய வழி பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்: யுஜிசி

பள்ளிகளிலேயே இணைய வழி பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அதன் செயலா் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கை: தற்போது இணைய வழி தொடா்பு அதிகரித்துள்ள சூழலில், அவற்றின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்திய அரசும் இணையப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த வழிமுறைகளை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதே நேரம், பள்ளிக் கல்வியிலேயே இணையப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைப்பதில் தொடங்கி, உயா்கல்வி, ஐஐடி போன்ற படிப்புகளில் அதிலுள்ள தீமை மற்றும் தற்காப்பு விஷயங்கள் உள்பட அனைத்தையும் மாணவா்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, இணைய வழி பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஹேக்கத்தான் போன்ற நிகழ்வுகளை நடத்தியும், இணைய வழி பாதுகாப்பில் முதல் நிலை நிறுவனங்களைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தும், மாணவா்களை கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கலாம்.

இந்தத் தகவலை அனைத்துக் கல்லூரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com