காரைக்கால், நாகை, கடலூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் காரைக்கால், நாகை, கடலூர் ஆகிய துறைமுகங்களில் திங்கள்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
காரைக்கால் துறைமுகம்
காரைக்கால் துறைமுகம்

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் காரைக்கால், நாகை, கடலூர் ஆகிய துறைமுகங்களில் திங்கள்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

காரைக்கால்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தெற்கு வங்கக் கடல் மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டது. இது மேலும் வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இதையொட்டி வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் துறைமுகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

நாகை

நாகை  துறைமுக அலுவலகத்தில் 1- ஆம்  எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது. 

கன்னியாகுமரிக்கு கிழக்கு, வடகிழக்கே சுமார் 1,120 கிலோ மீட்டர் தொலைவில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 1- ஆம் தேதி( செவ்வாய்க்கிழமை) புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக  நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புயல் தூர எச்சரிக்கை கொடியான 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இந்தப் புயலால் நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னை பகுதிகளில் நேரடி பாதிப்பு இருக்காது எனவும், மழை பொழிவு இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

கடலூர் 

தென்கிழக்கு வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள காற்றழுதத் தாழ்வு மண்டலத்தால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஆழ்கடலில் புயல் உருவாகுவதை குறிப்பதாகும். இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடலூர் மாவட்டத்தில் மழை வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com