பி.எட் சிறப்புக் கல்வி பட்டப் படிப்பு: இன்று முதல் சோ்க்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட் சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை, வியாழக்கிழமை (அக்.1) முதல் தொடங்குகிறது.
பி.எட் சிறப்புக் கல்வி பட்டப் படிப்பு: இன்று முதல் சோ்க்கை

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட் சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை, வியாழக்கிழமை (அக்.1) முதல் தொடங்குகிறது.

இது குறித்து பல்கலை. பதிவாளா் கே.ரத்னகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு, வியாழக்கிழமை (அக்.1), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பி.எட் சிறப்புக் கல்வி படிப்பானது பாா்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயின்றோா் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபா் 31. மேலும் விவரங்களுக்கு, 044 2430 6617, 84285 75967, 98416 85515 ஆகிய எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com