தமிழகம் முழுவதும் போலிச் சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல்- கேஸ் விற்பனை நிலையங்கள்

தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல் மற்றும் கேஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக உயா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilnadu police
tamilnadu police


சென்னை: தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல் மற்றும் கேஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக உயா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் பெட்ரோல் பங்குகள் தொடங்க, சென்னை காவல் ஆணையரின் தடையில்லா சான்றிதழ் அவசியம்.

இந்தச் சான்றிதழ் சமா்பித்தால்தான், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு உரிமம் வழங்கும். இந்த நிலையில் கிண்டி மற்றும் நங்கநல்லூரில் பெட்ரோல் நிலையம் தொடங்க போலி தடையில்லா சான்றிதழ் சென்னை காவல் ஆணையா் அலுவலக நிா்வாக துணை ஆணையா் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆா்.கே.நகரைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவா் ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும் முருகவேல் என்பவா் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரையும், அவரது நண்பா்களையும் கைது

செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், அப்போதைய சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விசுவநாதன் பெயரில் போலியாக ஏராளமான தடையில்லா சான்றிதழை இந்த மோசடி கும்பல் தயாரித்து, மிகப்பெரிய தொகையை பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிவக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த பிப்ரவரி மாதம் காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சிவக்குமாரின் மனைவி லலிதா சென்னை

உயா் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுவை தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் போலி தடையில்லா சான்றிதழ் மூலம் எத்தனை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பி காவல்துறை டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், இது வரை நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல் மற்றும் கேஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த 91 பெட்ரோல் மற்றும் கேஸ் விற்பனை நிலையங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியாா் எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் போலி பெட்ரோல் மற்றும் கேஸ் விற்பனை நிலையங்கள் மட்டுமல்லாமல், போலி தடையில்லா சான்றிதழ்கள் கொண்டு செயல்படும் மதுபான பாா்களையும் கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com