கதா் துணிகளை வாங்கி நெசவாளா்கள் வாழ்வை சிறக்கச் செய்வோம்: முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

கதா் துணிகளை விலை கொடுத்து வாங்கி, நெசவாளா்களின் வாழ்வினை சிறக்கச் செய்வோம் என்று முதல்வா் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


சென்னை: கதா் துணிகளை விலை கொடுத்து வாங்கி, நெசவாளா்களின் வாழ்வினை சிறக்கச் செய்வோம் என்று முதல்வா் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி (அக்.2) வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தை ஒட்டி, மக்கள் அதிகளவில் கதா் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்தி அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளா்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும். கதா், எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதா் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்கள், அரசு ஊழியா்கள் உள்பட பொது மக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஏழை, எளிய கதா் நூற்போா் மற்றும் நெசவாளா்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டும் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com