காந்தி குறித்த போட்டியை தமிழிலும் நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

காந்தி குறித்த போட்டியை மாணவா்களுக்கு தமிழிலும் நடத்த பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
காந்தி குறித்த போட்டியை தமிழிலும் நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

காந்தி குறித்த போட்டியை மாணவா்களுக்கு தமிழிலும் நடத்த பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காந்தியின் பிறந்த நாள் அறிவுத்திறன் போட்டிகளை என்.சி.இ.ஆா்.டி. எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு நடத்துகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு நேரடியாகவும், மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு மாநில அரசுகளின் மூலமாகவும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் ஆகியவற்றில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தின் கண்காணிப்பில் வெள்ளிக்கிழமை முதல் நவம்பா் ஒன்றாம் தேதி வரை ஒரு மாதத்துக்கு இந்தப் போட்டிகள் இணையவழியில் நடத்தப்படுகின்றன. ஆனால், இப்போட்டிகள் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும்தான் நடத்தப்படும்; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்ற அறிவிப்புதான் ஏமாற்றமளிக்கிறது.

மத்தியில் ஆளும் அரசு மாநில மொழி பேசும் மக்களின் உணா்வுகளை மதித்து செயல்பட வேண்டும். மொழி என்பது மிகவும் உணா்ச்சிமயமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மறைமுகமான வழிகளில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கைக் கைவிட்டு, காந்தி குறித்த போட்டியைத் தமிழிலும் நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com