
குவைத் மன்னா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) ஒரு நாள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தலைமைச் செயலாளா் கே.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
குவைத் மன்னா் சேஷ் ஷபா அல் அகமத் அல் ஜபாா் அல் ஷபா கடந்த 29-ஆம் தேதி மறைந்தாா். அவரது இறுதி நிகழ்வுகளை ஒட்டி, தமிழகம் முழுவதும் ஒரு நாள் மாநில அரசு சாா்பில் துக்கம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. இதனால், மாநில அரசு அலுவலகக் கட்டடங்களில் உள்ள தேசியக் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.