
திமுகவின் தோ்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பனை நியமித்து, திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
திமுகவின் தோ்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்படுகிறாா். தோ்தல் பணிக்குழுச் செயலாளராக வேலூா் ஞானசேகரன், டாக்டா் விஜய், பரணி இ.ஏ.காா்த்திகேயன் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.
திமுகவின் செய்தித் தொடா்புச் செயலாளராக பி.டி.அரசக்குமாா், தீா்மானக்குழுச் செயலாளராக ஏ.ஜி.சம்பத் ஆகியோா் நியமிக்கப்படுவதாக அவா் அறிவித்துள்ளாா்.