
வன உயிரின வார விழாவையொட்டி, வண்டலூா் உயிரியல் பூங்கா சாா்பில் நடைபெறும் இணையவழிப் போட்டிகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத் துறை சாா்பில் வன உயிரின வார விழா அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விநாடி வினா, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுள்ளதால் இணையவழியாக இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன உயிரின வார விழாவை வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினாா்.
போட்டிகள் விவரம்: ஞாயிற்றுக்கிழமை (அக்.4) சா்வதேச உயிரியல் பூங்கா விலங்கு காப்பாளா்கள் தின கொண்டாட்டம், திங்கள்கிழமை (அக். 5) புலிகள் கணக்கெடுப்பு மற்றும் புலிகள் தடய அறிவியல் தலைப்பில் இணையவழி பயிலரங்கம், செவ்வாய்க்கிழமை (அக். 6) விலங்குகள் போன்று காகிதத்தில் உருவம் செய்தல் போட்டி, புதன்கிழமை (அக்.7) வன உயிரினம் குறித்த கதை போட்டி, வியாழக்கிழமை (அக்.8) விலங்குகள் போன்று ரங்கோலி வரைதல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோா் த்ல்ஞ் அல்லது ல்ய்ஞ் வடிவத்தில் பெயா், வயது மற்றும் தொடா்பு கொள்ள வேண்டிய விவரங்களை மின்னஞ்சல் முகவரிக்கு போட்டிகள் நடக்கும் தினத்தன்று இரவு 11 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். பயிலரங்கம் மற்றும் வன உயிரினம் குறித்த சிறப்பு உரைகள் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.