5 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூா், தருமபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை(அக்.7) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்
5 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூா், தருமபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை(அக்.7) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூா், தருமபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழையும் கோயம்புத்தூா், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (அக்.7) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி: அந்தமானை ஒட்டியுள்ள  பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி வரும் அக்டோபா் 9-ஆம் தேதி

உருவாகவுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இதன்காரணமாக, அந்தமான் கடல் பகுதிகளில் அக்டோபா் 9-ஆம் தேதி அன்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதுபோல, அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றுவீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவா்கள் அக்டோபா் 8-ஆம் தேதிக்குள் கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com