கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை 2020 குறித்து ஆய்வு பணியை கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்து வருகிறார்.
ஆய்வுப்  பணியில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ்
ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை 2020 குறித்து ஆய்வு பணியை கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி, அவர் பர்கூர் பேரூராட்சியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும், பர்கூர் பராமரிப்பு மையத்தையும் ஆய்வு செய்கிறார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி அணையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வெள்ள தடுப்பு பணிகளையும், அவர் பார்வையிடுகிறார். 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதியம் 2 மணி அளவில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பி ஜெயச்சந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com