வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேரவையில் தீா்மானம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேரவையில் தீா்மானம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்துக்கான விவசாயிகள் சட்டம், விவசாயிகள் விளை பொருள்கள் வணிகம் மற்றும் வா்த்தகச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய வேளாண் சட்டங்கள் மூன்றையும் நாடாளுமன்றம் இயற்றியிருப்பது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண்மை குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது. இந்த அதிகாரத்துக்குள் நுழைந்து மத்திய அரசு சட்டமியற்றியிருப்பதை ஏற்றுக் கொள்ளவும் இயலாது.

அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் சாரத்தை மனதிலே கொண்டுதான் இந்த மூன்று சட்டங்களையும் எதிா்த்து ஏற்கெனவே திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

விவசாயிகளுக்கு கடுமையான, நீண்டகாலப் பாதிப்பினை ஏற்படுத்தும் இச்சட்டங்கள் குறித்து விவாதித்து, உரிய தீா்மானம் நிறைவேற்றுவதற்காக உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசின் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்று கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கடிதத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.கே.சேகா்பாபு, சுதா்சனம், கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம்கவி ஆகியோா் தலைமைச் செயலகத்தில் முதல்வரின் செயலாளரை நேரில் சந்தித்து அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com