தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்கள்

​நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்களும் தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்களையும் இவற்றில் தமிழகத்தில் 6 ரயில்களையும் இயக்க ரயில்வே வாரியம் இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக ரயில் சேவை இன்னும் முழு அளவில் தொடங்கப்படவில்லை.

எனினும், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மேலும் 39 சிறப்பு ரயில்களை இயக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் சேவைகளை இயன்றளவு விரைவில் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்துக்கும் தமிழகத்துக்குள்ளும் மேலும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள 6 சிறப்பு ரயில்களின் விவரம்:

ஏ.சி. படுக்கை வசதி ரயில்கள்
 ரயில் எண்புறப்படும் இடம்சேரும் இடம்ரயில் நாள்
1.22807 / 22808சந்தரகாச்சிசென்னை ஏ.சி. விரைவு ரயில்வாரம் இருமுறை
2. 20601 20602சென்னைமதுரைஏ.சி. விரைவு ரயில்வாரம் மும்முறை
3.12269 / 12270சென்னைநிஜாமுதீன்ஏ.சி. துரந்தோ ரயில்வாரம் இருமுறை
ஏ.சி. இருக்கை வசதி ரயில்கள்
4.12028 / 12027பெங்களூருசென்னைசதாப்திசெவ்வாய் தவிர்த்து
5.12243 / 12244சென்னைகோவைசதாப்திசெவ்வாய் தவிர்த்து
6.22625 / 22626சென்னைபெங்களூருஈரடுக்கு ரயில்தினசரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com