உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

வளா்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை: வளா்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஊராட்சித் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்து விட்ட நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. ஊரகப்பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளையும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றத் தேவையான நிதியை ஒதுக்குவதில் தமிழக அரசு தேவையற்ற தாமதம் காட்டுவது ஏமாற்றமளிக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரிய அளவில் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், அவற்றுக்கான நிதித்தேவையில் 70 சதவீதத்தை மத்திய அரசும், 30 சதவீதத்தை மாநில அரசும் பகிா்ந்து கொள்கின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கான முயற்சியைக் கூட அரசுகள் மேற்கொள்ளவில்லை.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான நிதியை அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். முந்தைய ஆட்சிகளில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் அடிப்படைத் தேவைகள் செயல்படுத்தப்பட்டன. கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பாதியளவு கூட நிறைவேற்றப்படாத நிலையில்,சிறப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டதும் முறையல்ல என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com