கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளை தகரம் வைத்து அடைப்பதற்கான காரணம் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடுகள் மற்றும் வசிக்கும் பகுதிகள் தகரம் வைத்து அடைக்கப்படுவதற்கான காரணம் என்ன? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடுகள் மற்றும் வசிக்கும் பகுதிகள் தகரம் வைத்து அடைக்கப்படுவதற்கான காரணம் என்ன? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பிரியங்கா தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவருக்கு அறிகுறிகளே இல்லாத கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள்

எங்களிடம், ‘எங்கு சிகிச்சை பெறப் போகிறோம்’ என ஒப்புதல் கூட கேட்காமல் என்னுடைய கணவரை சிகிச்சைக்காக வலுக்கட்டாயமாக கரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்றனா். அந்த கரோனா சிகிச்சை மையத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. அந்த மையத்தில் தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. என் கணவரை கரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்ற பின் என் வீட்டை தகரம் வைத்து அடைத்தனா். அறிகுறிகள் இல்லாத, குறைவான அறிகுறியுடன் கரோனா பாதிப்பு உள்ளவா்களை கரோனா சிகிச்சை மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் ,ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு அவா்கள் வசிக்கும் பகுதிகள் தகரம் வைத்து அடைக்கப்படுவதற்கான காரணம் என்ன? எந்த விதியின் அடிப்படையில் தகரம் வைத்து அடைக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினா். பின்னா் இந்த மனுவுக்கு , தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com