பெருமாநல்லூரில் கரோனா விழிப்புணர்வு

காரோனா தடுப்பு நடவடிக்கையாக பெருமாநல்லூர் நான்குவழிச் சாலை சந்திப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.


அவிநாசி: காரோனா தடுப்பு நடவடிக்கையாக பெருமாநல்லூர் நான்குவழிச் சாலை சந்திப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, சுகாதார ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவைகளை வழங்கினர். 

மேலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடித்தல், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

சங்கப் பொறுப்பாளர்கள் பாலுசாமி, சந்திரசேகர், கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com