பேளூரில் 2 நாள்களில் முடிவுக்கு வந்தது சுய பொது முடக்கம்

8 நாள்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த சுய பொதுமுடக்கம் 2 நாள்களில் முடிவுக்கு வந்தது. இன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
பேளூரில் திறக்கப்பட்டு இருந்த கடைகள்
பேளூரில் திறக்கப்பட்டு இருந்த கடைகள்

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியில் கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை முதல் அக்.15 ஆம் தேதி புதன்கிழமை வரை தொடர்ந்து 8 நாள்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த சுய பொதுமுடக்கம் 2 நாள்களில் முடிவுக்கு வந்தது. இன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

சேலம் மாவட்டம் பேளூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில தினங்களில் 10க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கரோனா தொற்றில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு, பேளூர் பகுதியில் இயங்கும் மளிகை கடைகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை, பேக்கரிகள், செல்லிடப்பேசி கடைகள், துணிக்கடைகள்,  நகைக்கடைகள் மற்றும் காய்கறிகள், பழக்கடை சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வணிகர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். 

வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 8 நாட்களுக்கு, அனைத்து கடைகளையும் அடைத்து, சுய பொதுமுடக்கம் கடைபிடிப்பதென முடிவு செய்தனர்.

இதனையடுத்து வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்களும் அனைத்து கடைகளும் அடைத்து வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சுய பொதுமுடக்கத்தை கடைபிடித்தனர்.

ஆனால், இந்த பொது முடக்கம் இரண்டே நாள்களில் முடிவுக்கு வந்தது. இன்று சனிக்கிழமை காலை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால், சுய பொதுமுடக்கம் கைவிடப்பட்டது. 

இதனால் பேளூரில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இருப்பினும், பொதுமக்கள் முகக்கசவம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் தவறாமல் பின்பற்ற வேண்டுமென, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com