மெரீனாவில் நவம்பர் முதல் மக்களுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் கருத்து

மெரீனாவில் நவம்பர் மாதம் முதல் பொதுமக்களுக்கு  அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மெரினா (கோப்புப்படம்)
மெரினா (கோப்புப்படம்)

சென்னை: மெரீனாவில் நவம்பர் மாதம் முதல் பொதுமக்களுக்கு  அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் - லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மெரீனாவில் தள்ளுவண்டி கடைகள் திறப்பது, மீன் சந்தையை திறப்பது மற்றும் மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள் மெரீனா கடற்கரை ஆக்கிரமிப்பு குறித்து நாளிதழில் வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அரசுத்தரப்பில், ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஆக்கிரமிப்புகள் மண்டல உதவி ஆணையர் தலைமையிலான குழு, லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றியுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்ததால் மீண்டும் வியாபாரம் செய்ய வந்து விட்டனர். இதுதொடர்பாக மீனவர் சங்கத் தலைவர்களுடன் கலந்து பேசி, இனிமேல் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என உறுதியளித்தார். பின்னர் மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக வருப் நவம்பர் 11 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மெரீனா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மெரீனாவில் அனுமதி வழங்கினால் ஏராளமான மக்கள் கூடிவிடுவார்கள். மெரீனாவில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மெரீனாவில் நவம்பர் மாதம் முதல் பொதுமக்களுக்கு  அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் எனவும், மெரீனாவை தூய்மையாக வைக்க  கடற்கரையில் தினமும் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் துறை ஆணையருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

நீதிபதிகளும் நடைப்பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் என தெரிவித்தனர்.
பின்னர்  விசாரணையை வரும் நவம்பர் 11-ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ஆணையர்கள் இருவரும் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com