திருவனந்தபுரம் புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்
திருவனந்தபுரம் புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்

நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்

நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்

ம்மன் திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பாரம்பரிய முறைப்படி புறப்பட்டது. 

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பின் 1840 ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன் பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய திருவுருவச் சிலை ள் பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். 

நவராத்திரி விழா நாள்களில் சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் கோட்டையில் வைத்து பூஜைகள் செய்யப்படும். விழா நிறைவடைந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்படும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 17 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சாமி சிலைகளை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்லாமல் வாகனம் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாரம்பரிய முறைப்படி தான் சாமி சிலைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று இந்து அமைப்பினரும், பாஜக, மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.  

இதைத் தொடர்ந்து தமிழக மற்றும் கேரள அரசுகளின் சார்பில் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சாமி சிலைகள் ஊர்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலிலிருந்து புறப்படும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

கேரள காவல் துறையினருக்கு அனுமதி இல்லாததால் தமிழக காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணைஆணையர் அன்புமணி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசாசோமன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாமிசிலை ஊர்வலம் தாணுமாலய சுவாமி கோயிலை வலம் வந்தது. அப்போது பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com