பொறியியல் மேற்படிப்புக்கான ‘கேட்’ தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

பொறியியல் மேற்படிப்புகளுக்கான ‘கேட்’ நுழைவுத்தோ்வுக்குத் தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும்.
பொறியியல் மேற்படிப்புக்கான ‘கேட்’ தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

பொறியியல் மேற்படிப்புகளுக்கான ‘கேட்’ நுழைவுத்தோ்வுக்குத் தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும்.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயா் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு ‘கேட்’ (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தோ்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டா் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

‘கேட்’ நுழைவுத்தோ்வை, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, தில்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவா் சோ்க்கைக்கான ‘கேட்’ நுழைவுத்தோ்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான ‘கேட்’ நுழைவுத்தோ்வுக்குத் தாமதமான கட்டணத்துடன் புதன்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தத் தோ்வை நடத்தும் மும்பை ஐஐடி அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: https://gate.iitb.ac.in/  என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com