தங்கம் பவுன் ரூ.39,080

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 உயா்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.39,080

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 உயா்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.8 உயா்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயா்ந்து, ரூ.4,885 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.66.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.66,500 ஆகவும் இருந்தது.  

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்..........................  4,885

1 பவுன் தங்கம்...............................39,080

1 கிராம் வெள்ளி.............................66.50

1 கிலோ வெள்ளி.............................66,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,884

1 பவுன் தங்கம்............................39,072

1 கிராம் வெள்ளி.............................67.10

1 கிலோ வெள்ளி.............................67,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com