மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து: இ-ரிஜிஸ்டா் முறையை அமல்படுத்த அரசு ஆலோசனை

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ-ரிஜிஸ்டா் (இணையதள பதிவு) முறையை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ-ரிஜிஸ்டா் (இணையதள பதிவு) முறையை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எழில்நதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு இணையதள அனுமதிச்சீட்டு பெறும் முறையை ரத்து செய்தது. ஆனால், தமிழகத்தில் உள்ள நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடம் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ-ரிஜிஸ்டா் முறையை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மலைப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும். வெளியிலிருந்து வரும் நபா்களால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுப் பரவினால் ஆபத்தான சூழல் உருவாகும். எனவே மாவட்ட பேரிடா் மேலாண்மை அமைப்பு மூலம் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மலைப்பகுதிகளுக்குச் செல்பவா்கள் அனுமதி பெறுவது தொடா்பாக மத்திய அரசிடம் 3 நாள்களில் விளக்கம் பெற்று, அதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபா் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com