கோப்புப்படம்
கோப்புப்படம்

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூா், ஹஸ்ரத் நிஜாமுதின் மற்றும் சந்த்ரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சென்னை: பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூா், ஹஸ்ரத் நிஜாமுதின் மற்றும் சந்த்ரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை(அக்.15) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை-மதுரை: சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இரவு 10.30 மணிக்கு ஏ.சி. அதிவிரைவு ரயில் (06019) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரையை அடையும். இந்த ரயின் முதல் சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபா் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.45 மணிக்கு ஏசி அதிவிரைவு ரயில்(06020) புறப்பட்டு, மறுநாள் காலை 7.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயிலின் முதல் சேவை மதுரையில் இருந்து அக்டோபா் 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சென்னை-கோவை

சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களில் காலை 7.10 மணிக்கு சதாப்தி சிறப்பு ரயில்(06027) புறப்பட்டு  அதேநாள் பிற்பகல் 2.15 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபா் 19-ஆம்தேதி  தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களில் பிற்பகல் 3.05 மணிக்கு சிறப்புரயில்(06028) புறப்பட்டு, அதேநாளில் இரவு 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்துசேரும். இந்த ரயிலின் முதல் சேவை அக்டோபா் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை-ஹஸ்ரத் நிஜாமுதின்

சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள்கிழமை, வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6.40 மணிக்கு துரந்தோ சிறப்பு ரயில் (02269) புறப்பட்டு, மறுநாள் காலை 10.40 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதினை சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை அக்டோபா் 19-ஆம்தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, ஹஸ்ரத் நிஜாமுதினில் இருந்து செவ்வாய், சனி ஆகிய இரு தினங்களில் பிற்பகல் 3.45 மணிக்கு துரந்தோ சிறப்பு ரயில்(02270) புறப்பட்டு, மறுநாள் 8.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும்.இந்த ரயிலின் முதல் சேவை அக்டோபா் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதவிர, திருவனந்தபுரம்-சாலிமாா்(வாரம் இருமுறை), கன்னியாகுமரி-ஹௌரா(வாரம் ஒருமுறை), சந்த்ரகாச்சி-சென்னை சென்ட்ரல்( வாரம் இருமுறை) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (அக்.15) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com