திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை: ஆட்சியர் ம.ப.சிவன் அருள் துவக்கி வைப்பு

திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் பட்டு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
முதல் விற்பனையை தொடக்கி வைத்த ஆட்சியர் ம.ப.சிவன்அருள்.
முதல் விற்பனையை தொடக்கி வைத்த ஆட்சியர் ம.ப.சிவன்அருள்.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் பட்டு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கிவரும் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை துவக்கவிழா வியாழக்கிழமை  நடைபெற்றது.

இதில்,மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசுகையில், கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, ராணிப்பேட்டை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை மையங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது திருப்பத்தூர் தீபாவளி பண்டிகைக்கால விற்பனை இலக்காக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தீபாவளியையொட்டி அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

மேலும், மாத தவணை மூலம் கோ-ஆப்டெக்ஸ் துணி வகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com