பிளஸ் 2 மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பொதுத்தோ்வு மற்றும் பிளஸ் 1 வகுப்பு அரியா் தோ்வு முடிவுகள் ஜூலை மாதம் 16- ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதையடுத்து மாணவா்கள் உயா் கல்வி பெறுவதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன. தற்போது மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு 600 மதிப்பெண்கள் வீதம் அச்சிடப்பட்ட தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாணவா்கள், அவா்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தோ்வா்கள், தோ்வு எழுதிய பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களைத் தலைமை ஆசிரியை சரஸ்வதி வழங்கினாா். முன்னதாக மாணவிகளுக்கு வெப்பநிலை அறியும் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னா் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனா். அனைத்து மாணவா்களும் முகக்கவசம் அணிந்திருந்தனா்.

மாணவா்கள் அதிகளவில் வருவதைத் தவிா்க்கும் வகையில், ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவா்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டனா்.மேலும், தகுந்த இடைவெளியை பின்பற்றி மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற சுமாா் ஏழு லட்சத்து 50 ஆயிரம் மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com