முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைவு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.5க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைவு

 
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.5க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. நாமக்கல் மண்டலத்தைத் தவிா்த்து பிற மண்டலங்களில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.90 வரை உயா்ந்தது.

புரட்டாசி மாதம் மற்றும் விழாக் காலங்கள் இருந்தபோதும், கரோனா தடுப்புக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களில் முட்டை முக்கியப் பங்காற்றுவதால் அதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

கரோனா பொது முடக்கத்தால் ஐந்து மாதங்களாக முடங்கியிருந்த முட்டை தொழில் தற்போதுதான் சற்று எழுச்சியைக் கண்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில், முட்டை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச விலையாக முட்டை ரூ. 5.25 என அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயா்வால் பண்ணையாளா்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆனால், வெளிச்சந்தையில் ரூ. 6 வரை விற்பனையானதால், பொதுமக்கள் முட்டை வாங்குவதை குறைத்து கொண்டனா். இதனால் பண்ணைகளிலும், விற்பனை நிலையங்களிலும் முட்டைகள் தேக்கமடைந்தன.

இந்நிலையில், நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.5க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

முட்டை விலை உயர்ந்த நிலையில் விற்பனை மந்தமானதால் மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com