ஒகேனக்கலில் சீரமைப்புப் பணிகளை கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு

ஒகேனக்கல் பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை தர்மபுரி கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஒகேனக்கலில் சீரமைப்புப் பணிகளை கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு
ஒகேனக்கலில் சீரமைப்புப் பணிகளை கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் மோதி சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பணிகளை தர்மபுரி கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

கர்நாடக அணையிலிருந்து நீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அண்மைக்காலங்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பின்போது பிரதான பெண்கள் குளிக்கும் அருவி மாமரத்து கனவு பரிசல்துறை நடைபாதை உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டன.

இந்த சீரமைப்பு பணியானது பென்னாகரம் ஒன்றியத்தின் சார்பில் 47 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. பின்னர் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு, கரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கின்போது சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியினை தர்மபுரி கோட்டாட்சியர் (பொ) தணிகாச்சலம் தலைமையிலான பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், பென்னாகரம் வட்டாட்சியர் சேது லிங்கம் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ஒகேனக்கல் பிரதான அருவி பகுதி, பெண்கள் குளிக்கும் அருவி, நடைபாதை மற்றும் மாமரத்து கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டனர். ஒகேனக்கல் பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை ஆய்வு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த பின்னர் ஒகேனக்கல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com