மன்னார்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி: ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை

மன்னார்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி நடைபெற்றுள்ளதை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.  
கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு சேதனையில் ஈடுப்பட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவலர்கள்.
கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு சேதனையில் ஈடுப்பட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவலர்கள்.

மன்னார்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி நடைபெற்றுள்ளதை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள கண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

தற்போது, இந்த பகுதியில் குறுவை நெல் சாகுபடி முடிந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விவசாயிகள் அரசு நோடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றார்.

கண்ணாரப்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில், தமிழக அரசு அறிவித்தப்படி தினசரி ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு விடப்பட்டிருந்தும். இதனை பின்பற்றாமல் நாள் ஒன்றுக்கு 700 நெல் மூட்டை மட்டும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல், வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தும்  காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக நேரம் என குறிப்பிடப்பட்டு இருக்கும் போது, இதனை மீறி இரவு நேரங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய விவசாயிகள் கொண்டு  வந்து வைத்துள்ள நெல் மூட்டைகள் மற்றும் குவியல்.

மூட்டைக் கு கூடுதலாக ரூபாய் 40 வரை கட்டாய வசூல் செய்யப்பட்டு வருவதாக, அப்பகுதி விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் புகார் வந்ததையடுத்து.

திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் வேணுகோபால், ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் காவலர்கள், வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு, கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்திற்கு திடீர் சோதனைக்கு வந்தனர்.

அப்போது, அங்கு பணியிலிருந்த பட்டியல் எழுத்தர் ஆனந்தராஜ் (32) மற்றும் சுமைப் பணியாளர்கள், இரவு காவலர் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.

அலுவலக நேரம் முடிந்து ஒரு லாரியில் இருந்து நெல் மூட்டைகள் அப்போது இறக்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
அவர்களிடம் மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை விடிய விடிய விசாரணை செய்தனர்,

இதன் முடிவில், பட்டியல் எழுத்தர் ஆனந்தராஜிடம் இருந்து கணக்கில் வராத ரூ.87,890-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும், பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டிருந்த கணக்கில் வராத 185 நெல் மூட்டைகள் இருப்பதையும் கண்டறிந்தனர். 

அலுவலக நேரம் முடிந்து இரவு நேரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி.

இதனை அடுத்து, மறு உத்தரவு வரும் வரை இரவு நேரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை கொள்முதல் நிலையத்திலிருந்து எடுத்து செல்லக் கூடாது என தெரிவித்துவிட்டு ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அரசு நோடி நெல் கொள்முதல் நிலையம் குறித்து, வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது,  சம்பளத்திற்கு மேல் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என நீதிபதி கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், நுகர்பொருள்கள் வழங்கல் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் சொந்த ஊரான மன்னார்குடியில் அரசு நோடி கொள்முதல் நிலயத்தில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் விடிய விடிய சேதனை நடத்தியது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com