சேலத்தில் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த முதியவர் மரணம்

இறந்ததாக நினைத்து உயிரோடு அண்ணனை குளிர்பதனப் பெட்டியில் படுக்க வைத்து மீட்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.
சேலத்தில் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த முதியவர் மரணம்
சேலத்தில் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த முதியவர் மரணம்

சேலம்:  இறந்ததாக நினைத்து உயிரோடு அண்ணனை குளிர்பதனப் பெட்டியில் படுக்க வைத்து மீட்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணிய குமார் ( 80). தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதித்தது. பின்னர் அவரது தம்பி சரவணன் குளிர்பதன  பெட்டியை வரவழைத்து பாலசுப்பிரமணிய குமார் இறப்பதற்கு முன்பே குளிர்பதனப்பெட்டியில் அவரை படுக்க வைத்தார் .

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சூரமங்கலம் காவல் நிலையத்தற்கு தகவல் அளித்தனர்.

பிறகு காவலர்கள் முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக சூரமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

முதியவரின் தம்பி சரவணன் மீது அஜாக்கிரதையாக நடத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது .

இந்த நிலையில் முதியவர் குளிர்பதனப்பெட்டியில் வைக்கப்பட்டது ஏன் என சேலம் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மலர்விழி விசாரித்தனர்.

அப்போது முதியவர் இறந்துவிட்டதாக சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் இறப்புச் சான்றிதழ் கொடுத்துள்ளார்.

இதனால் முதியவர் இறந்துவிடுவார் என கருதிய சரவணன் குளிர்பதனப் பெட்டியை வரவழைத்து அதில் முதியவரை படுக்க வைத்தது தெரியவந்தது.

இப்போது அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதியவர் பாலசுப்பிரமணியகுமார் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் .

இதை அறிந்த சூரமங்கலம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com