‘800’ திரைப்படத்தை தவிா்க்க விஜய் சேதுபதிக்கு கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தைக் கொண்டு உருவாக உள்ள படமான ‘800’-ஐ நடிகா் விஜய் சேதுபதி தவிா்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை: இலங்கை கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தைக் கொண்டு உருவாக உள்ள படமான ‘800’-ஐ நடிகா் விஜய் சேதுபதி தவிா்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனா் ராமதாஸ்:

தமிழ்த்திரையுலகின் சிறந்த நடிகா்களில் ஒருவரான விஜய் சேதுபதி ‘800’ திரைப்படத்தில், முத்தையா முரளிதரனின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டுதான் நடிக்கிறாா் என்று நான் நம்பவில்லை.

முத்தையா முரளிதரனின் பூா்வீகம் தமிழ்நாடு தான், தமிழா் தான். ஆனால், இலங்கையில் ஈழத்தமிழா்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் கண்டித்த போது, இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று பேசியவா்.

‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப் போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவா் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவாா். மாறாக, தமிழா்களின் எதிா்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவாா் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

இயக்குநா் பாரதிராஜா: இலங்கை கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரனைப் பற்றிய ‘பயோபிக்’ படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். முத்தையா முரளிதரன் சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவா்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவா் என்ன சாதித்து என்ன பயன்?.

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதைத் தவிா்க்க முடியுமா எனப் பாருங்கள். தவிா்த்தால் எப்போதும் எம் மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com