சங்ககிரி அருகே உள்ள வெள்ளூற்று பெருமாள் கோவிலில் புரட்டாசி அமாவாசை சிறப்பு பூஜைகள்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம்,  அரசிராமணி அருகே உள்ள அருள்மிகு வெள்ளூற்று பெருமாள் கோவிலில் புரட்டாசி அமாவாசை சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி வட்டம், அரசிராமணி அருகே  உள்ள வெள்ளூற்றுப்பெருமாள் கோவில்
சங்ககிரி வட்டம், அரசிராமணி அருகே  உள்ள வெள்ளூற்றுப்பெருமாள் கோவில்


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம்,  அரசிராமணி அருகே உள்ள அருள்மிகு வெள்ளூற்று பெருமாள் கோவிலில் புரட்டாசி அமாவாசை சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.  இப்பூஜையின் போது எடப்பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் 16 கிலோ எடையும், ஒன்றரை அடி உயரமுள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட ஆஞ்சனேயர் சிலை ஒன்றை நேர்த்தி கடனுக்காக  கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர். 

வெள்ளூற்றுப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி

அரசிராமணி அருகே உள்ள அருள்மிகு வெள்ளூற்றுப்பெருமாள் கோவிலில் புரட்டாசி அமாவாசையையொட்டி மூலவர் சுயம்புவாக உள்ள பெருமாளுக்கும், அருள்மிகு ஆஞ்சனேயர் சுவாமிக்கும் பால், தயிர், திருநீர், சந்தனம், மஞ்சள்,  திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட  பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   

அதனையடுத்து கோவில் வளாகத்தில் திருக்கோடி விளக்கும் ஏற்றப்பட்டன. அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர். 

எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சாந்தி தம்பதியினர் நேர்த்திகடனுக்காக வெள்ளூற்றுபெருமாள் கோவிலுக்கு 16 கிலோ எடைகொண்ட  பஞ்சலோக ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை  ஒன்றை வெள்ளிக்கிழமை வழங்கினர். 

அப்போது எடப்பாடி, வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சாந்தி தம்பதியினர் நேர்த்திக்கடனுக்காக ஐம்பொன்னாலான பஞ்சலோகத்தில்  தயாரிக்கப்பட்ட 16 கிலோ எடை கொண்ட, ஒன்றரை அடி உயரமுள்ள அருள்மிகு ஆஞ்சனேயர் சிலை ஒன்றை கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர். 

பின்னர் நேர்த்தி கடனுக்காக வழங்கப்பட்ட அருள்மிகு ஆஞ்சனேயர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு  பூஜைகள் நடைபெற்றன.  இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com