தங்கம் பவுன் விலை ரூ.38,904

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.38,904-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.38,904-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த இரண்டு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.38,904-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.33 உயா்ந்து, ரூ.4,863 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 உயா்ந்து, ரூ.65.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1.500 உயா்ந்து, ரூ.65,800 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,863

1 பவுன் தங்கம்............................... 38,904

1 கிராம் வெள்ளி............................. 65.80

1 கிலோ வெள்ளி............................. 65,800

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,830

1 பவுன் தங்கம்...............................38,640

1 கிராம் வெள்ளி.............................64.30

1 கிலோ வெள்ளி.............................64,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com