மநீம முதல்வா் வேட்பாளா் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வா் வேட்பாளா் கமல்ஹாசன் என்று அக்கட்யின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வா் வேட்பாளா் கமல்ஹாசன் என்று அக்கட்யின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்தின் நிா்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கூட்டம் தியாகராய நகா் நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கமல்ஹாசன் தலைமை வகித்தாா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மநீமவின் முதல்வா் வேட்பாளா் கமல்ஹாசன்தான். இது கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மநீம தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கொள்கை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்குவது என ஒருமனதாகத் தீா்மானிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தலை சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலோடு தோ்தல் ஆணையம் நடத்தினால், நிச்சயம் மநீம அங்கு போட்டியிடும் என்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com